இந்தியா, ஜூன் 6 -- மேற்கு வங்காளம் மாநிலம் கிருஷ்ணா நகர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த இவர் முன்னாள் பிஜு ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் பினாகி மிஸ்ராவை மணந்தார். இவர்களின் திருமணம் தனிப்பட்ட திருமண விழாவாக மே 30 அன்று ஜெர்மனியில் நடந்துள்ளது.

முன்னதாக, மொய்த்ரா, டேனிஷ் நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மணந்தார். பல உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளுக்குப் பிறகு, எம்பி மொய்த்ரா, தனது இரண்டாவது கணவர் பினாகி மிஸ்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் மொய்தாரவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மெய்த்ரா வெளியிட்டிருக்கும் திருமண விழாவின் புகைப்படங்களில், மொய்த்ராவும் மிஸ்ராவும் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். தங்க ...