இந்தியா, ஜூலை 16 -- திருவண்ணாமலையில் மாநகராட்சி மற்றும் அறநிலையத் துறையை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலையில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத அறநிலைய துறையை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று காலை (ஜூலை 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ...