இந்தியா, ஜூலை 29 -- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் இரண்டாம் கட்ட எழுச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு திருச்சி விமான நிலையத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (இன்று) வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சிவகங்கை மாவட்டத்தில் என்னுடைய எழுச்சிப் பயணத்தை தொடங்குகிறேன். இதுவரை 49 சட்டப்பேரவை தொகுதிகளில் பயணம் மேற்கொண்டதில் மக்களிடையே எழுச்சியைப் பார்க்க முடிந்தது.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கேட்கப்படுவது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. டெல்டா பகுதிகளில் இப்போது விவசாயத்துக்கு காவிரி நீரை திறந்து விட்டுள்ளனர். அதனால் நடவ...