இந்தியா, ஜூலை 15 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் பகுதியில் உள்ள காளி கோயிலில் தற்காலிகமாக காவல் பணி செய்துவந்தவர் அஜித்குமார். நகை திருட்டு தொடர்பாக இவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அடித்து துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் கஸ்டடியில் இறந்த அஜித்குமாரின் குடும்த்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசின் நிவாரண நிதிக்கான ரூ. 7.50 லட்சம் காசோலையை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், அமைச்சர் பெரிய கருப்பன் நேரில்...