அரவக்குறிச்சி,கரூர், செப்டம்பர் 26 -- அரவக்குறிச்சி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடியில் கரூர் மெயின் ரோட்டில் கூடியிருந்த மக்களிடையே உரை நிகழ்த்தினார்.

"தரங்கப்பட்டி ஊராட்சியே மக்கள் வெள்ளத்தில் அதிர்ந்துவிட்டது. இந்த கூட்டத்தைப் பார்க்கையில் ஒரே ஒருவருக்கு மட்டும் தூக்கமே வராது. அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். ஆம், செந்தில் பாலாஜிக்கு தூக்கம் போய்விட்டது. நீங்கள் போடும் ஆரவாரம் மகிழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதியை அதிமுக வென்றுவிட்டது. ஒரு செந்தில்பாலாஜி அல்ல, ஓராயிரம் செந்தில்பாலாஜி வந்தாலும் இத்தொகுதியில் அதிமுகவை அசைக்க முடியாது.

திமுகவின் ஆட்சி 52 மாதம் முடிந்துவி...