இந்தியா, ஜூன் 19 -- பாடல் வரிகளை எழுதும் பணியில் தன் மீதே பழி விழுவதாக பாடலாசிரியர் வைரமுத்து கவலை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்தப்பதிவில், 'என்மீது ஒரு பழிஉண்டு

பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று

அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது

திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும்.

இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்;

மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்

புன்னைகை மன்னன் படத்தில்

'வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்' என்றொரு பாட்டு

மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு

'மழைத்துளி தெறித்தது

எனக்குள்ளே குளித்தது

நினைத்தது பலித்தது

உயிர்த்தலம் சிலிர்த்தது'

என்று எழுதியிருந்தேன்

'உயிர்த்தலம் என்பதை மட்டும்

மாற்றிக்கொடுங்கள்' என்றார் இசையமைப்பாளர்

ஏன் என்றேன்...