தேன்கனிக்கோட்டை,தளி,ராயக்கோட்டை, ஆகஸ்ட் 11 -- மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் தொடங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பெருமளவு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். அடுத்தபடியாக தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்தார்.

அப்போது அவர், ''மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து உங்களைப் பார்க்கிறேன். இப்போதே இந்த தொகுதியை அதிமுக வென்றுவிட்டதாக உணர்கிறேன். நீங்கள் கொடுக்கின்ற ஆரவாரம் மகிழ்ச்சியை ஸ்டாலின் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பார். இன்று திருப்பூரில் ஸ்டாலின் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறார், பஸ் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன் என்று கூறியிருக்க...