இந்தியா, ஆகஸ்ட் 23 -- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

"திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு.

விலைவாசியல் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ன விலை என்ன. ...