மானாமதுரை,பரமக்குடி,திருவாடாணை, ஜூலை 30 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் இன்று மானாமதுரை, பரமக்குடி மற்றும் திருவாடானை மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். முதலில் மானாமதுரை பிரதான சாலை தேவர் சிலை அருகே மக்களிடம் உரையாற்றினார்.

"திமுக கூட்டணி பலமான கூட்டணி என்று சொல்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கிறார். ஆனால், அதிமுக உங்களை நம்பி மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் தான் எஜமானர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் தான் தேர்வுசெய்கிறார்கள். ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று பகல் கனவு காண்கிறார். உண்மையில் அதிமுக 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மானாமதுரை நுழையும்போதே மக்கள் வெள்ளம் போல் காட்சியளிக்க...