ஏலகிரி, ஆகஸ்ட் 14 -- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை ஏலகிரி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்துப் பேசினார்.

அந்த மக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்ட இபிஎஸ், ''அதிமுக ஆட்சியில் நடமாடும் மருத்துவமனை இப்பகுதியில் செயல்பட்டு வந்தது. அம்மா மினி க்ளினிக்கை திறந்தோம். அதை இந்த ஆட்சியில் மூடிவிட்டார்கள். மலைவாழ் மக்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வசதியாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தோம்.

ஏலகிரியை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ஏலகிரியில் 14 கிராமங்களில் சாலைகள் பழுதடைந்து இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் நல்ல சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்...