இந்தியா, மே 27 -- தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உழவர்களிடம் ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான விலையை இரு மாதங்களுக்கும் மேலாக உழவர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் சார்பில் நெல் கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, அவற்றைக் காப்பாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்...