சென்னை, ஆகஸ்ட் 15 -- சென்னை ரிப்பன் மாளிகையில் பல நாட்களாக போராட்டம் நடத்திய துப்புரவுப் பணியாளர்கள், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில், போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தேன்மொழி என்பவர் யார்? என்பது குறித்த கேள்வி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பரபரப்பான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், துப்புரவு தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு தொடர்ந்த தேன்மொழி, திமுகவைச் சேர்ந்தவர் என்றும், திமுக மகளிர் தொண்டரிணி துணை அமைப்பாளர் என்றும், மறைந்த 56வது வட்ட செயலாளர் தனசேகர் என்பவரது மகள் என்றும் குறிப்பிட்டுள்ள இன்பது...