கரூர், செப்டம்பர் 29 -- கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களின் விஷம கருத்துக்கள் பகிரப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வீடியோ ஒன்று வெளியிட்டார். இந்நிலையில், முதல்வரின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வினையாற்றியுள்ளார். இதோ அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சம...