சிவகங்கை,காரைக்குடி,திருப்புத்தூர், ஜூலை 29 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தின் இரண்டாம் கட்டமாகத் தொடங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை தொகுதிகளில் மக்களை நேரில் சந்திக்கிறார். இதற்காக திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி வந்த இபிஎஸ், காரைக்குடி, செக்காலை பகுதியில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர், ''காரைக்குடி மாநகராட்சியே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவே இந்த தொகுதியின் வெற்றிக்கு அறிகுறி. காரைக்குடிக்கு என்று ஒரு வரலாறு உண்டு, வள்ளல் அழகப்பச் செட்டியார் என்றால் நாடே அறியும். அவருக்குச் சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தைக் கல்விக்காகக் கொடுத்தவர். அதனாலே அழகப்பா பல்...