சென்னை, ஆகஸ்ட் 13 -- சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள "வாக்குத்திருட்டு" மற்றும் "SIR" (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:

தீர்மானம் 1:

தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் - அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ள...