பெரம்பலூர், ஜூலை 15 -- அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை அரியலூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். காலையில் விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் சாலை குன்னம் பேருந்து நிலையம் அருகே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 20 அடி உயரமுள்ள ராட்சத மாலையை கிரேன் மூலம் எடப்பாடியாருக்கு சூட்டி அழகுபார்த்தனர்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர், ''குன்னம் தொகுதியின் அத்தனை வாக்காளர்களும் குழுமி, இந்...