கோயம்புத்தூர், ஆகஸ்ட் 18 -- அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தமிழர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கூறியதாவது:

இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது, இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்படுவதற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்வது தமிழ்நாட்டிற்கு பெருமை.

துணை ஜனாதிபதி பதவி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமைப்படக்கூடிய விஷயம். கட்சி பேதமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை வெற்றிபெற செய்ய ஆதரவு அளிக்க வேண்டும் என அன்போடு கேட்...