ஸ்ரீவைகுண்டம், ஆகஸ்ட் 2 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் இன்று திருச்செந்தூர் தொகுதிக்குப் பின்னர் ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், ''திமுக இதுவரை தமிழகத்திற்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அவர் குடும்பத்துக்காகத்தான் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என்று நான்கு அதிகார மையங்கள் உள்ளன. இந்த நால்வரும்தான் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.

50 மாத ஆட்சியில் மக்களின் துன்பங்களைப் பற்றி முதல்வருக்குக் கவலையில்லை, இது, வாழை, கரும்பு, நெல் பயிரிடும் பகுதி விவசாயிகள் நிரம்பிய தொகுதி. மீன்பிடித்தொழில் இருக்கிறது. இந்த பேரூராட்சியில் அனைத்து வீதிகளி...