இந்தியா, ஜூன் 26 -- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ராமதாஸ், தனது 60-வது திருமண விழாவில் மகன் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, "எந்தவொரு தந்தையும் தனது பிள்ளைகள் இல்லாதபோது மனவேதனை அடைவார்" என உணர்ச்சிபூர்வமாக பதிலளித்தார். மேலும், அன்புமணியின் பெயர் இடம்பெற்றிருந்த பாமக விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது குறித்து, இது தவறான பண்பாடு என்றும், இதற்குப் பின்னால் உள்ளவர்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

மதுரையில் நடைபெற்ற முருகர் மாநாடு தொடர்பாக, பெரியார் மற்றும் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக எழுந்த கேள்விக்கு, மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார். "கொள்கை வேறுபாடுகள்...