கோவை,தூத்துக்குடி, செப்டம்பர் 14 -- வ.உ.சி.துறைமுக ஆணையம் சார்பில், கோயம்புத்தூரில் வர்த்தகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பங்குதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமீபத்திய உலக வர்த்தக மாற்றங்களுக்கு ஏதுவாக துறைமுகத்தின் ஆதரவை வழங்கவும் மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடியில் அமைந்திருக்கும் வ.உ.சி.துறைமுகம் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்காக பிரத்தியேகமான ஒரு வசதி மையத்தை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், 50% கப்பல் தொடர்புடைய கட்டண தள்ளுபடி, கூடுதல் இலவச சேமிப்பு நாட்கள் மற்றும் நேரடி துறைமுக நுழைவு வசதி போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. அரசாங்க நிறுவனமான இது, புதிய வணிக வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதைக் காட்டும் ஒரு உதாரணமாகும்.

கூட்டத்தில் பங்கேற்ற பங்குதாரர்களின் ஒருபகுதியினர்

பங்குதாரர்களைச்...