அம்பாசமுத்திரம்,தென்காசி, ஆகஸ்ட் 5 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் இன்று தென்காசி மக்களை சந்தித்த பிறகு அம்பாசமுத்திரம் வந்து சேர்ந்தார். நகர எல்லையில் இருந்து இபிஎஸ்ஸை வரவேற்கும் வகையில் இளைஞர்களின் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதையடுத்து அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் பகுதியில் குழுமியிருந்த மக்களிடம் உரையாற்றினார் இபிஎஸ்.

"அம்பாசமுத்திரம் நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்திவந்து உங்களை சந்திக்கிறேன். எதிரிகள் மிரளும் அளவுக்கு பிரமாண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறோம் இதுவே நம் வெற்றிக்கு அறிகுறி. கூட்டணியை வைத்து வென்றுவிடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தால் அப்படிப் பேச மாட்டார்.

50 மாத கால திமுக ...