விளாத்திக்குளம்,தூத்துக்குடி,கஞ்சம்பட்டி, ஜூலை 28 -- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கஞ்சம்பட்டி ஓடையிலிருந்து வெள்ள நீரைத் திருப்பி புதிய கால்வாய் அமைத்து நாராயண காவேரி கால்வாயுடன் இணைக்கும் திட்டம், புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்தை கைவிடவும் இயற்கையான வழித்தடத்தில் கொண்டு செல்லக் கோருவது மற்றும் N.ஜெகவீரபுரம் அணைக்கட்டு தண்ணீர் காரணமாக கரிசல் பூமியில் விவசாயம் அழிவதால் தடுப்புச் சுவர் அமைப்பது அல்லது அணைக்கட்டை பாதிப்பு இல்லாத வகையில் மாற்றி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், அதன் பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன் முன்னிலையில், இது தொடர்பாக நீர்வள ஆதாரத்துறை மற்றும் தலைமைப் பொறியாளர் நீர்வள ஆதாரத்துறையிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறிய...