சென்னை, ஆகஸ்ட் 5 -- ஓரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்பில் திமுக, தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் அதிமுகவை நேரடியாக விமர்சித்து அடுத்தடுத்து நகர்வுகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திமுக ஐடி விங்க் சார்பில், ஓரணியில் தமிழ்நாடு விளக்க வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும், அது எது மாதிரியான வஞ்சகம் என்றும் விளக்கி அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை நேரடியாக தாக்கி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழரின் அடையாளங்களை பாஜக அரசு அழிப்பதாகவும், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் அடையாளங்களை மாற்றுவதாகவும் அந...