ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி, ஆகஸ்ட் 7 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். ராஜபாளையம் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசினார்.

''ராஜபாளையம் நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. உங்கள் எழுச்சியே இந்த தொகுதியில் வெற்றியை நிரூபணம் செய்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அவ்வப்போது, 'திமுக கூட்டணி வலுவானது' என்று பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே.. ராஜபாளையம் பேச்சை நேரலையில் பார்ப்பீர்கள், உங்களுக்கு கூட்டணி வலிமையாக இருக்கலாம், எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை மக்கள் தான் ஆட்சிக்கான ஆயு...