திருச்சி, ஆகஸ்ட் 24 -- அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கட்சிக்குள் அதிருப்தியில் இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. மேலும் மோதல் காரணமாகவே இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் தங்கமணி கலந்துகொள்ளவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதோடு தங்கமணி திமுகவில் இணையத் திட்டமிட்டிருப்பதாக ஒரு நாளிதழ் செய்தியே வெளியிட்டது.

இந்த செய்தி வெளியானதும் முன்னாள் அமைச்சர் தங்கமணி உடனடியாக மறுப்பு வெளியிட்டார். அதில், 'நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் திட்டமிட்டு என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறவினர் என்பதையும் தாண்டி, எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரிடம் உயிரை விட மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளவன். ஆகையால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதை இந்த இயக்கத்தின் உ...