இந்தியா, ஜூன் 23 -- "உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" என மதுரையில் முருகன் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்து உள்ளார்.

முருகப் பெருமானுக்கு வணக்கம் செலுத்தி தனது உரையைத் தொடங்கிய பவன் கல்யாண், "மதுரை மக்களுக்கும், இந்து முன்னணிக்கும், கந்த சஷ்டி கவசம் பாடிய லட்சோபலக்ஷம் பக்தர்களுக்கும் வணக்கம். என்னை மதுரைக்கு அழைத்தது முருகன். என்னை வளர்த்தவர், துணிச்சல் தந்தவர் வெற்றிவேல் முருகன்," என்றார்.

"மதுரை முருகனுக்கு நெருக்கமானது. முருகனின் முதல் அறுபடை வீடு (திருப்பரங்குன்றம்) மற்றும் கடைசி அறுபடை வீடு (திருத்தணி) மதுரையைச் சுற்றியே உள்ளன. மீனாட்சி அம்மன் (முருகனின் தாய் பார்வதி) மற்றும் சிவபெருமான் (முருகனின் தந்தை) இங்கு வீற்றிருக்கின்றனர். இத்தகைய புண்ணிய பூமியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் ...