சிவகாசி, ஆகஸ்ட் 8 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் அச்சகத்தைப் பார்வையிட்ட பிறகு பட்டாசு தொழிற்சாலையை சுற்றிப் பார்த்தார். அவரிடமிருந்து தொழிலாளர்கள் விலகி நிற்பதையும், பேசுவதற்குத் தயங்குவதையும் பார்த்து, ''ஏன் யாரும் பேசமாட்றீங்க.. சும்மா தயங்காமப் பேசுங்க"என்று அவர்களை பேசச் சொல்லி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகும் அவர்கள் தயங்கி நிற்கவே, 'நீங்கள் இந்த தொழிலில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள்? நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? சொந்த வீடு இருக்கிறதா? இந்த தொழிலில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?' என்று பல கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கினார்.

சொந்த வீடு இல்லை என்று சொன்னவர்களிடம், ''சொந்த வீடு இல்லைன்னா அதுக்கு அதிமுக ஆட்சியில் அதற்கு ஏற்பாடு பண்ணுவோம். அதுக்காகத்தான் இந்த விஷயமெல்லாம் கேட்கிறேன்"என்றவரிடம் பட்டாசுத...