சென்னை, ஆகஸ்ட் 6 -- சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, முதல்வர் பேசியதாவது:

''தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நேற்று இரவில் இருந்து இதுதான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்பதே இதுதான்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டிருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான், இரட்டை இலக்க அந்த வளர்ச்சியை இன்ற...