சென்னை, செப்டம்பர் 19 -- திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், தன்னுடைய தொகுதி பங்கீடு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதை நோக்கி, தங்களின் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி. சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிக்கிறது. சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப் பெறுவோம். கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்போம்" என்று அப்போது கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சு திமுக கூட்டணி கட்சியினர் இட...