கரூர், அக்டோபர் 5 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை இதோ:

கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

"கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.

'இந்த செய்தியில் இருந்து தெரிவது என்ன...