Madurai, செப்டம்பர் 23 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை இதோ:

மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்கப்படுவதை இந்த பொம்மை முதல்வரால் நியாயம் செய்துவிட முடியுமா?

"சமூகநீதி விடுதிகள்" என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை பொம்மை முதல்வர், அவர் தலைமையிலான விளம்பர மாடல் அரசும் எப்போது தான் உணரப் போகிறது?

அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே ...