திருச்சி,மணப்பாறை, ஆகஸ்ட் 25 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மணப்பாறை தொகுதியில் மக்களை சந்தித்துவிட்டு, அடுத்ததாக திருச்சி புதூர் பிஷப் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார்.

"அமைச்சர் நேரு இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.. தமிழ்நாட்டில் இவருடைய இலாகாவில்தான் நிறைய பிரச்னைகள். சொத்துவரி ஏற்றிவிட்டனர். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விவசாயிகளுக்குத் துன்பம் விளைவிக்கும் திட்டத்தைதான் கொண்டுவருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் 20 கிணறுகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். சியா கமிட்டி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அமைச்ச...