இந்தியா, ஆகஸ்ட் 14 -- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு அடுத்தபடியாக கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

"இந்த கே.வி.குப்பம் தொகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த தொகுதி. இது அதிமுகவின் கோட்டை. இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். இப்பகுதி வளம் பெற நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி உங்களுக்காக பலமுறை குரல் கொடுத்திருக்கிறார்.

விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் வேண்டும். அதைப் பெருக்குவதற்கு குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம், திமுக அரசு கைவிட்டுவிட்டது. மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதேபோல் விவசாயிகள் பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம...