இந்தியா, ஜூலை 13 -- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 83.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இயக்குநர் ஹரி டைரக்சனில் வெளிவந்த 'சாமி' படத்தில், பெருமாள் பிச்சை என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் மக்களின் மனதை வென்றவர். குறிப்பாக, அவரது பாடி லாங்குவேஜும் இழுத்து இழுத்துபேசும் ஸ்டைலும் பலரை ஈர்த்தது.

அடுத்து 'திருப்பாச்சி' படத்தில் இவர் நடித்த சனியன் சகடை கேரக்டர் பிரபலமாகப் பேசப்பட்டது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....