இந்தியா, ஜூன் 30 -- தந்தை - மகன் இடையே மோதல் முற்றி உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் சூழலில், அன்புமணி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் முழு அதிகாரம் தன்வசம் உள்ளதாக அன்புமணி கூறி வரும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாமகவில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கும் மேலாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. ராமதாஸ் தரப்பு திருவண்ணாமலையில் நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும், அன்புமணி தரப்பு பணையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன...