சென்னை, ஆகஸ்ட் 14 -- சென்னை மாநகராட்சி, ராயபுரம் மற்றும் திரு வி க நகரம் உள்ளிட்ட பகுதிகளில் திடக் கழிவுகளை அகற்றும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துப்புரவு பணியாளர்கள் தங்கள் வேலைகளை நிரந்தரமாக்க வேண்டும், உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இது தொடர்பான சென்னை ரிப்பன் மாளிகை முன்பு, மாநகராட்சி அலுவலகம் அருகே, 13 நாட்கள் தொடர்ந்து நடைபாதையில் போராட்டம் நடத்தினர்.

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளில் தீர்வு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளில் தீவிரமாக இருந்தனர். போராட்டத்தை விரிவுபடுத்தினர். இதற்கிடையில், தூய்மை பணியாளர்களின் போராட்டம், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக, பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை ஏற்ற நீதிபதி,...