இந்தியா, ஜூன் 18 -- ஆளும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்து உள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன், திமுக கூட்டணியில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதாகவும், இது முதற்கட்டமாக மட்டுமே உள்ளதாகவும், அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விவரங்கள் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவனை சமீபத்தில் திருச்சியில் சந்தித்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இது முதல் கட்டம் மட்டுமே என்றும், அடுத்த கட்டங்களில் மேலும் வெளிப்...