இந்தியா, ஜூன் 9 -- தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய் முன்னிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்தனர்.

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஶ்ரீதரன் (1991-1996) மற்றும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் தெய்வ செல்வின் ஆகியோரும் கட்சியில் இணைந்தனர். தெய்வசரின் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து, 2021ல் மீண்டும் திமுகவில் இணைந்து, தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

விஜயின் தனிப்பட்ட வழக்கறிஞராக செயல்பட்டு வந்த குமரேசன், கட்சியின் சட்ட ஆலோசனைப் பிரிவு (Legal Wing) தலைவராக நி...