இந்தியா, ஜூன் 2 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு, விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு இன்றே நோட்டு, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்க ஏற்பாடு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரக்கோணம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அரசியல் தலையீடு என்பது முற்றிலும் இல்லை என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல்நேர வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் ஜூன் 5ஆம் தேதி வரை இரவு நேரங்களில் இடி, மின்னல் உடன் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்ச...