இந்தியா, ஜூன் 26 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 71,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், "எல்லோருக்கும் எல்லாமென, எல்லோரது மனங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதே திராவிட மாடல் ஆட்சி" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். கலைஞர் கனவு இல்ல திட்டப் பயனாளிகளின் நிகழ்ச்சி வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.

ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். ரயில் கட்டண உயர்வை உடனே கைவிடும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை நடைபெற்றது. ஆதார...