இந்தியா, ஜூன் 20 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

சன் டிவி பங்கு விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல். சன் டிவி பங்குகளை 2003 ஆம் ஆண்டு முதல் கையாண்ட விதத்தில் இருந்து அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தான் தலைவர் பதவியை ஏற்ற நாளிலிருந்து மனநிம்மதியை இழந்துவிட்டதாகவும், சமீபத்திய இரண்டு மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் நிர்வாகிகளிடையே வேதனை தெரிவித்துள்ளார்.

பா.ம.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு திமுக காரணம் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் மன்னிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, "போக போக...