இந்தியா, மே 27 -- நீலகிரியில் தொடரும் கனமழை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2வது நாளாக கொட்டித் தீர்க்கும் கனமழை. கடந்த 24 மணி நேரத்தில் 25.6 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இங்கு 60 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. கோவை மற்றும் நீலகிரியில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளர் தனபால் என்பவர், சாதியரீதியாக துன்புறுத்துவதாக கூறி, ஓட்டுநர் பழனிக்குமார் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு அருகில் நின்ற பணிமனை மேலாளரையும் கட்டிப்பிடித்தப...