இந்தியா, செப்டம்பர் 25 -- சென்னையில் நடந்த "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எனக்கு முன்னால் பேசிய எல்லோரும், தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது, எப்படியெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்து, எத்தனை இடர்கள் வந்தாலும், தன்னுடைய மாணவர்களை முன்னேற்றுகிறது என்று பேசினார்கள். இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு முக்கியக் காரணம், எங்களை பாராட்டிக் கொள்வதற்காக அல்ல, இன்றைக்கு நாங்கள் உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்தடுத்த Batch மாணவர்களும், இன்னும் படிப்பு மீது ஆர்வம் அதிகமாக வேண்டும்! அதுதான் முக்கியம்.

ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் கால் முளைத்த சதி! இந்த சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக, கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்த...