ஆற்காடு,வேலூர்,காட்பாடி, ஆகஸ்ட் 19 -- 'மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று 100 தொகுதிகளை அடைந்து, சுறுசுறுப்பாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். 100வது தொகுதியாக ஆற்காட்டில் தன்னுடைய பிரசாரத்தை அவர் தொடர்ந்தார். முன்னதாக

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி தொகுதி மக்களை சந்தித்துவிட்டு. அடுத்தபடியாக வேலூர் அண்ணாசாலையில் திரண்டிருந்த மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

"இந்த வேலூர் மாநகரத்துக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவந்தோம். அதிமுக திட்டத்தை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. ஆனால், இன்னும் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமை பெறவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி ...