சிவகங்கை,மாத்தூர்,நாட்டாகுடி, ஆகஸ்ட் 10 -- அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சிவகங்கை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் தொடர்ந்து மூன்று கொலைகள் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ளதை கண்டும் காணாமலும் இருந்து வருவதோடு, மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்து, கிராமத்தை விட்டு வெளியேறியுள்ள மக்களை மீண்டும் குடியமர்த்தி, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரமான விவசாயம், கால்நடை வளர்ப்பு முதலானவற்றை தொடர்ந்து மேற்கொண்டிடவும், இங்குள்ள தொடக்கப் பள்ளியை திறந்திடவும் வலியுறுத்தியும்;

கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியு...