இந்தியா, ஜூன் 23 -- அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 27, 28-ல் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, வரவிருக்கும் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டங்கள் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலுடன் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்கள் ஜூன் 27, 2025 (வியாழக்கிழமை) மற்றும் ஜூன் 28...