காரைக்குடி, செப்டம்பர் 23 -- அரிய கைவினைத்திறனுக்காகப் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த பிரபல நகை வடிவமைப்பாளரான மீனு சுப்பையா நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் செட்டிநாடு நகை அருங்காட்சியகத்தை "பெட்டகம்" என்ற பெயரில் காரைக்குடியில் தொடங்கி உள்ளார்.

காரைக்குடி,செட்டிநாட்டுப் பகுதியின் கலாச்சார மற்றும் கட்டடக்கலை மையமாகத் திகழ்கிறது. அங்கு உள்ள புகழ்பெற்ற நகரத்தார்கள் வீட்டிலும் குடும்பத்தின் மதிப்புமிக்க செல்வங்களை சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மரப் பெட்டி அல்லது இரும்புப் பெட்டி உண்டு. இதனை "பெட்டகம்" என்று அழைக்கிறார்கள்.செட்டிநாடு நகைகளின் பாரம்பரியத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக தொடங்கப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கும் "பெட்டகம்" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தி...