இந்தியா, ஜூலை 15 -- பருவநிலை மாற்றம் காரணமாக காடுகள் வளர்ந்தாலும், கார்பன் தேக்கும் திறன் வளராமல் குறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியக் காடுகளின் கார்பன் தேக்கும் திறன், சில அடர்ந்த காடுகளில் ஒளிச்சேர்க்கைத் திறன் குறைவு காரணமாக 12 சதவீதம் வரை குறைந்துள்ளது என IIT கோரக்பூர் ஆய்வில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக எழும் சூழல் காரணமாக, குறிப்பாக மண்ணின் ஈரம் குறைந்து வறண்டு காணப்படுவதாலும், அதிகரிக்கும் வெப்பம் காரணமாக தாவரங்களில் இருந்து அதிக நீர் ஆவியாகி வளி மண்டலத்தை அடைவதாலும் இது நடந்தேறுகிறது.

இந்தியா மற்றும் தமிழகத்தில் காடழிப்பு தொடர்ந்து நடந்து வரும் சூழலில், கார்பனைத் தேக்கும் திறன் குறைந்து வரும்போது, தற்போதைய ஆய்வில் காடுகளின் பரப்பு அதிகமா...