இந்தியா, ஜூன் 8 -- இளையராஜாவின் மூத்தமகன் கார்த்திக் ராஜா. பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இவரின் மகன் யத்தீஸ்வர்.இவர் தற்போது பக்தி பாடல் ஒன்றிற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்பாடலை அவர் திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டார்.
இந்த பாடல் அறிமுகம் குறித்து கார்த்திக் ராஜா பேசும் போது, 'திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் என்னுடைய மனைவியும் என்னுடைய மகனுமான யத்தீஸ்வரனும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட பக்தி பாடல்களை கேட்டு விட்டு இதேபோல நாமும் செய்யலாமே என்று யத்தீஷ்வர் கூறினான்.
நான் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் என்று கூறினேன். நான் பார்வையாளர் என்ற இடத்தில் இருந்துதான் இந்த பாடலை பார்த்திருக்கிறேன். நன்றாக செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தமிழ் மக்கள் கேட்டுவிட்டு அதனை கூற வேண்டும்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.