இந்தியா, ஜூன் 13 -- ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் விஸ்வாஷ் குமாரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ரமேஷ் விஸ்வாஷ் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த 25 பேர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் சி 7 வார்டுக்கு மோடி சென்றார்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் 11ஏ இருக்கையில் இருந்த ரமேஷ் விஸ்வாஷ் குமார், அவசர வெளியேறும் வாயில் அருகே இருந்ததால் அங்கிருந்து குதித்தார். 40 வயதான அவர், தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்றும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு தனது சகோதரருடன் பிரிட்டனுக்கு பயணம் செய்ததாகவு...